குழந்தைகள் பாதுகாப்புக்குழு சிறப்பு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்புக்குழு சிறப்பு கூட்டம்
x

குழந்தைகள் பாதுகாப்புக்குழு சிறப்பு கூட்டம் நடந்தது.

கரூர்

புஞ்சை தோட்டக்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ரூபா தலைமை தாங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் ரமேஷ் முன்னிலை வகித்தார். குழந்தைகள் நல அலுவலர் செந்தில் வரவேற்று ேபசினார். சிறப்பு விருந்தினராக வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் 18 வயதிற்கு கீழ் பெண் குழந்தைகள் எவரேனும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டால் மருத்துவ அலுவலர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க ேவண்டும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை மற்றும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story