சிவராத்திரி நாளில் சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்கி வழிபட சிறப்பு அனுமதி


சிவராத்திரி நாளில் சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்கி வழிபட சிறப்பு அனுமதி
x

சிவராத்திரி நாளில் சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்கி வழிபட சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் பேரையூர் அருகே சதுரகிரி மலையில் வனப்பகுதியில் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் மகா சிவராத்திரி, அமாவாசை ஆகியவற்றை முன்னிட்டு வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் வழிபாடு நடைபெறும் என்பதால் பக்தர்கள் மலையில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையும், கோவில் நிர்வாகமும் சிவராத்திரி நாளில் பக்தர்கள் சதுரகிரி மலையில் தங்க சிறப்பு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளன. இதனால் சிவராத்திரிக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story