பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு


பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில்  காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:00 AM IST (Updated: 19 Oct 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகே பூவனூரில் உள்ள சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


Next Story