சந்திர கிரகணத்தின் போது திருவாரூர் தியாகராஜருக்கு அபிஷேகம்


சந்திர கிரகணத்தின் போது திருவாரூர் தியாகராஜருக்கு அபிஷேகம்
x

தியாகராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுர வாசல் சந்திர கிரகணத்தின் போது திறந்து இருந்தது.

தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் நடை சந்திர கிரகணத்தின் போது திறக்கப்பட்டு தியாகராஜருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் நடை சந்திர கிரகணத்தின் போது திறக்கப்பட்டு தியாகராஜருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிரகணங்கள்

ஒவ்வொரு ஆண்டும் சூரிய, சந்திர கிரகணங்கள் வருகின்றன. இந்த கிரகண நேரங்களில் உணவு உண்பது கூடாது என கூறுகிறார்கள். கிரகண நேரத்தில் வெளிப்படும் கதிர் வீச்சு உணவினை விஷத்தன்மை உடையதாக மாற்றிவிடும் என கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் திதி கொடுக்க கூடாது என்றும் கூறுகிறார்கள். இந்த கிரகணம் பிடிக்கும் காலத்தில் கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று சந்திர கிரகணம் மதியம் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழ்ந்தது. கிரகணத்தின்போது பல கோவில்களின் நடை சாத்தப்படும் நிலையில் திருவாரூரில் உள்ள சைவ சமயங்களின் தலைமை பீடமாக கருதப்படும் தியாகராஜர் கோவில் நடை மட்டும் திறந்திருக்கும் என்பது தனிச்சிறப்பாகும்.

அபிஷேகம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையில் தியாகராஜர் சாமி நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். தியாகராஜ சாமி மகாராஜாவாக வீற்றிருந்து நவக்கிரக தோஷங்களை நீக்குவதால் இக்கோவில் சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.

இதனால் கிரகண நேரங்களில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று சந்திர கிரகணத்தின் போது தியாகராஜ சாமிக்கு கிரகண அபிஷேகத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story