பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தகட்டூரில் பிரசித்திப்பெற்ற பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரிலும் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு மிக்க தகட்டூர் பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி வைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, திரவியம், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story