ஆலங்குடி குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு


ஆலங்குடி குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் அருேக ஆலங்குடியில் நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய கோவிலான ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று குருவார வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.


Next Story