மலையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


மலையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

மலையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

புன்னம் பகுதியில் உள்ள மலையம்மன், புக்கராண்டி சுவாமி கோவிலில் நேற்று மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள விநாயகர், மலையம்மன், புக்கராண்டி சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story