முப்பெரும் தேவியர் ஆலயத்தில் சிறப்பு பூஜை


முப்பெரும் தேவியர் ஆலயத்தில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் முப்பெரும் தேவியர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி மாதாந்திர வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 4.30 மணியளிவில் நடை திறக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம். திருநீறு, நறுமண பொருட்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் காலை 11 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story