பழனி வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
பழனி பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் நலனுக்காக, பழனி கிரிவீதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பழனி தெற்கு கிரிவீதியில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story