பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சுழி

திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியில் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள பெருமாளுக்கு புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூைஜ நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெற்றிலையூரணி

கங்கரக்கோட்டை ஊராட்சி எலுமிச்சங்காய்பட்டியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல வெற்றிலையூரணி மலையில் உள்ள பெருமாள் கோவில், செவல்பட்டி மலையின் மீது உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில், ஏழாயிரம் பண்ணையில் விண்ணகரப்பெருமாள் கோவில், கீழத்தாயில்பட்டி பெருமாள் கோவில், அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தூரில் சாத்தூரப்பன் என்று அழைக்கப்படும் பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல நென்மேனியில் உள்ள பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.

ஆலங்குளம்

ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவில், கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகோபால பெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில், நதிக்குடி திருவேங்கடமுடையார் பெருமாள் கோவில், புலிப்பாரை பட்டி வரதராஜபெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் சிறப்பு பூைஜ நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது.

சிவகாசி

விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார். சிவகாசி பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி சுவாமி சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ராஜபாளையம் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


Next Story