சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story