சிங்கம்புணரி கோவில்களில் சிறப்பு பூஜை


சிங்கம்புணரி கோவில்களில் சிறப்பு பூஜை
x

தை பொங்கலை முன்னிட்டு சிங்கம்புணரி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவுகபெருமாள் அய்யனார் பூர்ண புஷ்கல தேவியர் கோவிலில் தை பொங்கலையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் சேவுகப்பெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர் மாலையுடன் தங்க முலாம் பூசப்பட்ட அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில், கண்ணமங்கலம்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Related Tags :
Next Story