கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜை


கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜை
x

கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம் பேரூராட்சி பகுதியில் கோடகநல்லூர் சுந்தரசுவாமி அதிஷ்டானத்தில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து லிங்க வடிவிலான சுவாமிகள் ஜீவசமாதியில் பட்டு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோடகநல்லூர் சுந்தரசுவாமியை வழிபட்டு சென்றனர்.


Next Story