வி.புதூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை


வி.புதூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
x

வி.புதூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் - ராஜபாளையம் நெடு்ஞ்சாலையில் வி.புதூரில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு நடைதிறக்கபட்டது. ெதாடர்ந்து பல்ேவறு சிறப்பூ பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. வி.புதூர், சத்திரபட்டி, சமுசிகாபுரம், அய்யனாபுரம், கீழராஜகுலராமன், கன்னி தேவன்பட்டி, ஆலங்குளம், ராஜபாளையம், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story