மதுரைவீரன் சுவாமிக்கு கிடாய் வெட்டி சிறப்பு பூஜை


மதுரைவீரன் சுவாமிக்கு கிடாய் வெட்டி சிறப்பு பூஜை
x

மதுரைவீரன் சுவாமிக்கு கிடாய் வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

தோகைமலை அருகே இடையபட்டியில் மதுரைவீரன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆடி மாதத்தையொட்டி சுவாமிக்கு பக்தர்கள் கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கும்மி பாடல்களுடன் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் கலந்து கொண்ட கோலாட்டம் நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


Related Tags :
Next Story