கடம்பவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கான சிறப்பு பூஜை
கடம்பவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருதுநகர்
காரியாபட்டி,
நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதவள்ளி- ஸ்ரீகோடி கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக யாகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மஞ்சள், புஷ்பங்கள் கலந்த புனித நீரை சிவ வாத்தியங்கள் முழக்கத்துடன் ஊர் முழுவதும் முக்கிய வீதிகளில் வலம் வந்து பின்னர் கடம்பவனேஸ்வரர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து நடைெபற்ற கோவில் கட்டும் திருப்பணிக்கான சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story