அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

வைகாசி மாத பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதேபோல் புன்னம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி, சேமங்கி மகாமாரியம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதியம்மன், நஞ்சை புகழூர் கண்டியம்மன், திருக்காடுதுறை மாரியம்மன் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.தோகைமலை அருகே உள்ள கழுகூர் அ.உடையாபட்டியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story