மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை


மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை
x

மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை

திருப்பூர்

உடுமலை

உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் ஆடிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆடிப்பெருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சிகாலபூஜை நிகழ்ச்சிகளும், மாலை 6மணிக்கு சிறப்பு அலங்காரம்,

மகாதீபாராதனை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு மாரியம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சென்று பிரசாதத்தை வாங்கி சென்றனர். மேலும் சில பக்தர்கள் வீடுகளில் கம்பங்கூழ் செய்து பாத்திரங்களில்கொண்டு வந்திருந்தனர். அதைபக்தர்களுக்கு வழங்கினர். சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் சி.தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story