தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குளம்,
தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் முருகன் கோவில், மாதாங்கோவில்பட்டி முருகன் கோவில் ஆகிய முருகன் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதேபோல வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் சக்திவேல் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு அருகே உள்ள நத்தம்பட்டியில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல சாத்தூர் சுப்பிரமணிய சுவாமி ேகாவில், ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலாபுரம் செந்தில் ஆண்டவர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி-வள்ளிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருச்சுழி
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 9 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூைஜ நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருப்புக்கோட்டையில் புளியம்பட்டி பழனியாண்டவர் கோவில், பஜார் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவில், பாளையம்பட்டியில் உள்ள சுப்பிரமணியர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
துலுக்கன்குறிச்சி
வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல் குளத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு வழிவிடு பாலமுருகன் கோவிலில் காப்பு அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பிள்ளையார் கோவிலில் இருந்து பால் குடத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்து வழிவிடு பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானை, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய ஏழாயிரம் பண்ணையிலுள்ள பழனியாண்டவர் கோவிலிலும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
-