சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
திருவாடானை தாலுகாவில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரியை யொட்டி சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரியை யொட்டி சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆதிரெத்தினேசுவரர் கோவில்
திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதசுவாமி, அரிய நாயகி அம்மன் சமேத த்ருணஜோதீஸ்வரர், தொண்டி சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்களில் நான்கு கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமி- அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவராத்திரியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில்களில் இரவு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
ஏகாம்பரேஸ்வரர் ேகாவில்
இதேபோல் எஸ்.பி.பட்டினத்தில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், தீர்த்தாண்ட தானத்தில் பிருகன்நாயகி சமேத சர்வ தீர்த்தேஸ்வரர், நீர்க்குன்றம் அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், ஓரியூரில் மட்டுவார் குழலி அம்மன் உடனுறை சேயுமானார் கோவில் மற்றும் கட்டிவயல், அரும்பூர் கிராமங்களில் உள்ள சிவாலயங்களிலும் சிவராத்திரியை யொட்டி சாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.