கோவிலில் சிறப்பு பூஜை
சீவலப்பேரி சிவன் கோவிலில் நவராத்திரி விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை அருகே சீவலப்பேரி சிவன் கோவிலில் நவராத்திரி விஜயதசமியை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும், விரைவில் கோவிலில் தேர் வலம் வர வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது. காலையில் கணபதி ஹோமம், 108 சங்கு பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்றது. காசி விசுவநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சாந்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சீவலப்பேரி அருகே அலங்காரப்பேரி முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை பரமசிவன், இசக்கியம்மாள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story