பெரியகுளம் காளஹஸ்தீசுவரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


பெரியகுளம் காளஹஸ்தீசுவரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 May 2023 2:30 AM IST (Updated: 30 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் காளஹஸ்தீசுவரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேனி

பெரியகுளம் தென்கரையில் பிரசித்திபெற்ற காளஹஸ்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்தநிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இதையொட்டி காளஹஸ்தீசுவரர் கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அப்போது சிவப்பெருமானை குளிர வைப்பதற்காக தண்ணீர் நிரப்பப்பட்ட தாரா பாத்திரத்தின் மூலம் துளித்துளியாய் தண்ணீர் விழுகும் வகையில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 108 இளநீர் மற்றும் திருமஞ்சன பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story