திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு
x

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம்

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் சிவபெருமான் நெருப்பு உருவகமாக தன்னை வெளிப்படுத்தி காட்டினார். இத்தகைய சிறப்பு பெற்ற நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன நாளான நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல்கால பூஜை தொடங்கியது. இதில் விநாயகர் வழிபாடு, 108 கலச பூஜை, சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் 2-ம் கால பூஜை தொடங்கி மகா பூர்ணாகுதியும், 3 மணி அளவில் சுவாமி நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் காலை 7 மணி அளவில் கோ தீபாராதனை என்னும் ஆருத்ரா தரிசன காட்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு 9.30 மணி அளவில் சுவாமி நடராஜர்-சிவகாமியின் வீதிஉலா தொடங்கியது. இந்த வீதிஉலா நகரின் ரதவீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது.

பக்தர்கள் தரிசனம்

மேலும் திண்டுக்கல் மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில், ரெயிலடி சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சுவாமி நடராஜர், மேற்கு ரதவீதி சிவன் கோவில், செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் அழகாம்பிகை உடனுறை சிவகுருசாமி கோவில், முள்ளிப்பாடி சிவன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது.


Next Story