வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் 'பாதம் கழுவும் நிகழ்ச்சி'
பெரிய வியாழனையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
பெரிய வியாழனையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
பெரிய வியாழன்
ஏசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, 'நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள்' என்றார். இந்த நிகழ்வு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெரிய வியாழனையொட்டி நேற்று வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட்தனராஜ் ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
சிறப்பு திருப்பலியை தொடர்ந்து சீடர்கள் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தஞ்சை மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், சீடர்களின் பாதங்களை கழுவினார்.
முன்னதாக பாதிரியார்கள் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.