தனியார் வேலை வாய்ப்பு முகாம்
சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் 26-ந் தேதி நடக்கிறது
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் விருதுநகர் ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 26-ந் தேதி சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை வாய்ப்பு முகாம் குறித்த தகவல் அடங்கிய துண்டு பிரசுரத்தை கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்வி சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொண்டு பயன்பெறலாம். இது முற்றிலும் ஒரு இலவச சேவை ஆகும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெறுபவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. எனவே விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.