மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பார்மஸி மற்றும் பொறியியல் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் செய்யப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன் அடையலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.