ஆடி முதல் வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி முதல் வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

ஆடி முதல் வெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி முதல் வெள்ளி

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தன. காய்கறி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

பெரிய மாரியம்மன்

ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை முண்டக கன்னி அம்மன் கோவிலில் ஆடிபண்டிகை உற்சவத்தையொட்டி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கூழ் ஊற்றி நேர்த்திக்கடன்

ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் அம்மன்களுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினா். இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story