புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

தேவூர்

சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

தலைவாசல் அருகே வீரகனூர் பஸ் நிலையம் அருகே உள்ள கஜ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் எதிரில் உள்ள கொடி மரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் மகாலட்சுமி தாயார், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. சாமிக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டனர்.

இதேபோல் புத்தூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆறகளூர் வரதராஜ பெருமாள் கோவில், மணிவிழுந்தான் தெற்கு புதூர் வரதராஜ பெருமாள் கோவில், தலைவாசல் வரதராஜ பெருமாள் கோவில், தேவியாக்குறிச்சி நரசிம்ம சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

தேவூர்-தாரமங்கலம்

தேவூர் அருகே கல்வடங்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் முன்பு திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தாரமங்கலம் அருகிலுள்ள கரிய பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் துலாபாரம் எனும் எடைக்கு எடை பணம் செலுத்தியும். மொட்டை அடித்தும். கோவிலைச் சுற்றி தேர் இழுத்தும் வழிபட்டனர்.

மேச்சேரி

நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல மேச்சேரி கோட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள் கோவில், அமரத்தானூர் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மேச்சேரி எறகுண்டபட்டி ரங்கநாதர் பெருமாள் கோவில், கைகாட்டி வெள்ளார் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், சோரகை மலை வேட்ராயப் பெருமாள் கோவில், பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவில், வனவாசி மலை பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம்

பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், விளக்கேற்றியும் வழிபட்டனர். 3-வது சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

எடப்பாடி

எடப்பாடி, மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக எடப்பாடி பெரிய ஏரி பகுதியில் தெப்பத்தேர் பவனி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜபெருமாள் எழுந்தருளி ஏரியின் மறுகரையில் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு தெப்பத்தில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மீண்டும் சவுந்தரராஜ பெருமாள் சன்னதி வந்தடைந்தார். இதேபோல் எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story