கோவில்களில் சிறப்பு பூஜை


கோவில்களில் சிறப்பு பூஜை
x

சித்ரா பவுர்ணமியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேலம்

சித்ரா பவுர்ணமியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு பூஜை

சேலத்தில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று சாமிக்கு பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிவன், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் கோட்டை பெருமாள் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் சேலம் ராஜகணபதி கோவில், கோட்டை பெருமாள் கோவில், 2-வது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், எல்லைப்பிடாரியம்மன் கோவில், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

காளியம்மன் கோவில்

சேலம் நெத்திமேடு தண்ணீர்பந்தல் மகா காளியம்மன் கோவிலில் அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருபாலித்தார். இதேபோல் சித்ரா பவுர்ணமியையொட்டி குமரகிரி தண்டாயுதபாணி கோவில், பாண்டுரங்கநாதர் கோவில், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story