சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கரூர்
வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை ஆனி மாத சிவராத்திரியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், மாலை அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதேபோல காகிதபுரம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், நன்னீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story