நாகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை


நாகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை
x

பவுர்ணமியையொட்டி நாகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

வெள்ளியணையில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பவுர்ணமியையொட்டி நாகேஸ்வரி அம்மனுக்கு புனித நீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story