ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
வடுவூர், குடவாசலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ஆவணி அவிட்ட விழா விஸ்வகர்ம சமுகத்தினர் சார்பில் நடந்தது. விழாவில் காரைக்கால் பூபதி உபாத்தியாயர் கலந்து கொண்டு விஸ்வகர்மா, காயத்ரிதேவிக்கு வருடந்திர யாகபூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார். தொடர்ந்து இரும்பு, மரம், பித்தளை, சிற்பம், தங்கம் வேலை செய்யும் விஸ்வகர்ம தொழிலாளர்களுக்கு பூணூல் அனிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான விஸ்வகர்ம சமூகத்தினர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பூனூல் அனிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் வடுவூர் ஸ்ரீமத் ஆண்டவன் வேத பாட சாலையில் ஆவணி அவிட்டம் விழா நடந்தது. விழாவுக்கு வேத பாடசாலை முதல்வர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் காயத்ரி மந்திரம் உள்ளிட்ட வேத மந்திரங்கள் வேத பாடசாலை மாணவர்களுக்கு உபதேசிக்கப்பட்டது.