திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சுவாமி நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆனி திருமஞ்சனத்தையொட்டி நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணி அளவில் சிவயாக பூஜைகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து 9 மணிக்கு சுவாமி நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 24 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் 21 கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளும் எழுந்தருளினர். அப்போது மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
Related Tags :
Next Story