கோவில்களில் சிறப்பு பூஜை


கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆனிதிருமஞ்சனத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

திண்டுக்கல்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் சாமிகளுக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெரியநாயகி அம்மன், நடராஜர்-சிவகாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் தேவாரம், திருப்புகழ் பாடி சிறப்பு பூஜை, 16 வகை தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 5 மணிக்கு நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 7 மணிக்கு நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பட்டிவீரன்பட்டி நாகேஸ்வரியம்மன் கோவிலில் உள்ள சிவகாமி அம்மன், உடனுறை ஆனந்த நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி உலக நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் அழிய வேண்டியும் சிறப்பு பூஜைகள் மற்றும் மாணிக்கவாசகரின் 51 பதியங்களும் பாடப்பட்டன. அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆனந்த நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பித்தளைப்பட்டியில் உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் கோவிலில், ஆனிமாத திருமஞ்சனத்தையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் 16 வகையான சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story