பாலமுருகன் சாமிக்கு சிறப்பு பூஜை
தியாகதுருகத்தில் பாலமுருகன் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகத்தில் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வளாகத்தில் அமைந்துள்ள பாலமுருகன் சாமிக்கு பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பக்தர்கள் நேற்று காலை பால்குடம் எடுத்து வந்து, சாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் சாமிக்கு 16- வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர், மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story