லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தேனி
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள விஜயதசமியையொட்டி லட்சுமி ஹயக்ரீவர் சாமிக்கு சன்னதியில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அவர்களது பெற்றோர் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து, பின்னர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் திருவோணத்தையொட்டி சீனிவாச பெருமாளுக்கு 108 கிலோ பஞ்சாமிர்ததை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனை கோவில் அர்ச்சகர் கார்த்திக் பட்டாச்சாரியர் மற்றும் கோவில் தக்கார் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story