கந்தசஷ்டி விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் பால முருகப்பெருமான் கோவில் உள்ளது. கந்தசஷ்டி மகா லட்ச்சார்ச்சனை விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி காப்புக்கட்டி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாவாஜனம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று பால முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், கமலவாகனம், பச்சை சாற்றி அலங்காரம் செய்து மூலவர் வேலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story