சிவராத்திரியையொட்டி இன்று சக்திநாத ஸ்படிக பரமேஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை
சிவராத்திரியையொட்டி இன்று சக்திநாத ஸ்படிக பரமேஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள சக்திநாத ஸ்படிக பரமேஸ்வரர் லிங்கத்திற்கு சிவராத்திரியையொட்டி இன்று (சனிக்கிழமை) சிறப்பு பூஜையும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
இதையொட்டி மாலை 6 மணிக்கு பிரதோஷ வழிபாட்டுடன் முதல் காலை பூஜையும் தொடங்குகிறது. இந்த சிறப்பு பூஜையில் பால், இளநீர், விபூதி சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு முதல் திருமால் திருச்சிற்றம்பலம் திரை இசை நிகழ்ச்சியும், சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஸ்படிக லிங்கத்திற்கு தாமரை மலர் கொண்டு சிறப்பு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
* இதைப்போல் அருகன்குளம் ராமலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி விடிய விடிய சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
சிவராத்திரியையொட்டி நெல்லையப்பர் கோவில், தச்சநல்லூர் நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், நெல்லை சந்திப்பு சொக்கநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தான்தோன்றியப்பர் கோவில், கொக்கிரகுளம் சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. நெல்லை டவுன் சங்கிலி பூதத்தார் கோவிலில் கொடை விழா மற்றும் சிவராத்திரியையொட்டி இன்று இரவு 7:30 மணிக்கு சிவராத்திரி சிறப்பு வழிபாடு, புனித தீர்த்தம் தெருக்களில் வலம் வருதலும் நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8-30 மணிக்கு பால்குடம் எடுத்து வருதலும், மதியம் 1 மணிக்கு அபிஷேகமும், மதிய கொடையும், இரவு 7 மணிக்கு பூக்குழி இறங்குதலும் நடக்கிறது.