சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை


சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 May 2023 1:00 AM IST (Updated: 13 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளின் ஒருவராக அருள் பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷண பைரவர். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி தினத்தில் ெசார்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பால், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து அரளி உள்ளிட்ட பூக்களால் மலர் அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் தாடிக்கொம்ைப அடுத்த அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுக்காம்பட்டி துரைஆதித்தன் சித்தர் சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த பூைஜயில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது காலபைரவருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், ரவுண்டுரோடு கற்பக கணபதி கோவில், ராம்நகர் வல்லப கணபதி கோவில், கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில், முள்ளிப்பாடி திருக்காமேஸ்வர்-கோகிலாம்பாள் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூைஜ நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story