வேம்பு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை


வேம்பு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
x

வேம்பு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

ஆடி மாதத்தை முன்னிட்டு கரூர் பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து வேம்பு மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மாலையில் முக்கிய வீதிகள் வழியாக சாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story