கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை
கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை நடப்பதாக கலெக்டர் தொிவித்தாா்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோ-ஆப்டெக்சில் 2 வாங்கினால் 1 இலவசம் என்ற சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையானது 20.8.2023 வரை நடைபெறும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், திரைசீலைகள் போன்ற ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பட்டுச்சேலை முதல் கைக்குட்டை ரகங்கள் வரை அனைத்து ரகங்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்பெறலாம்.
வாடிக்கையாளர்கள் இரண்டு எண்ணிக்கையிலான ரகங்கள் வாங்கும் போது, ஒரு ரகத்தின் விலைக்கு (குறைவான விலை) ஈடான மதிப்புள்ள துணி ரகங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தி 12-வது தவணையை இலவசமாக பெற்று 12 மாதம் முடிந்த பிறகு 30 சதவீத தள்ளுபடியுடன் துணி ரகங்களை வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.