வியாபாரி மீது தீ வைத்த 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு


வியாபாரி மீது தீ வைத்த 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு
x

நாகர்கோவிலில் பழங்கள் கொடுக்காத ஆத்திரத்தில் வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பழங்கள் கொடுக்காத ஆத்திரத்தில் வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பழ வியாபாரி

ஈத்தாமொழி அருகே வடக்கு சூரங்குடி தட்டான்விளையை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30), வியாபாரி. நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வதற்கு தயாரானார். அப்போது கடைக்கு வந்த புன்னைநகர் ஹோலிகிராஸ் ரோட்டை சேர்ந்த நவீன்குமார் மற்றும் தட்டான்விளையை சேர்ந்த சஞ்சய் ஆகிய 2 பேரும் பிரேம் ஆனந்திடம் பழங்கள் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பிரேம் ஆனந்த், 'பழங்களை கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்போது எடுக்க முடியாது' என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் பிரேம் ஆனந்திடம் தகராறில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகள் பேசி கல்லால் தாக்கினர். மேலும் ஆத்திரம் தீராத அவர்கள் பிரேம் ஆனந்த் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் பிரேம் ஆனந்தின் கை மற்றும் வயிற்று பகுதியில் தீ பற்றி எரிந்தது. இதனால் அவர் அலறித்துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனிப்படை

இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்போில் நவீன்குமார் மற்றும் சஞ்சய் ஆகிய 2 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிைடயே போலீஸ் தேடுவதை அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story