எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ெரயில் வாரம் இருமுறை இயக்கப்படும்


எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ெரயில் வாரம் இருமுறை இயக்கப்படும்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ெரயில் இனி வாரம் இரண்டு நாட்கள் இயக்கப்பட ெரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ெரயில் இனி வாரம் இரண்டு நாட்கள் இயக்கப்பட ெரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் இருமுறை

எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை வாராந்திர ெரயிலாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ெரயில் இனி வாரம் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வேளாங்கண்ணிக்கு காலை 5.50 மணிக்கு சென்றடைகிறது.

இதேபோன்று வேளாங்கண்ணியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு மறுநாள் காலை 6.30 மணிக்கு சென்றடைகிறது. தற்போது நின்று செல்லும் அனைத்து சிறப்பு ெரயில் நிறுத்தங்களிலும் இந்த ெரயில் நின்று செல்லும்.

சிறப்பு ரெயில்

மேலும் திருப்பதியில் இருந்து கொல்லம் வரை வாரம் இருமுறை சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் திருப்பதியில் இருந்து வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் கொல்லத்திலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ெரயில் செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர், பட்டுக்கோட்டை, காஞ்சீபுரம், ரேணிகுண்டா வழியாக திருப்பதி செல்கிறது. குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த தகவைல ெரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story