ஹூப்ளி-காரைக்குடி இடையே சிறப்பு ரெயில்
ஹூப்ளி-காரைக்குடி இடையே சிறப்பு ரெயில் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு ஹூப்ளி-காரைக்குடி கோடை கால சிறப்பு ரெயில் புறப்பட்டு சர் விஸ்வேஸ்வரய்யா பெங்களூரு ரெயில் நிலையம், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக புதுக்கோட்டைக்கு இரவு 11:23 மணிக்கு வருகிறது. தொடர்ந்து இந்த ரெயில் காரைக்குடிக்கு இரவு 12.35 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கத்தில் வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காரைக்குடி-ஹூப்ளி கோடை கால சிறப்பு ரெயில் காரைக்குடியிலிருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மதியம் 12.43 மணிக்கு வருகிறது. பின்னர் 12.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக சர் விஸ்வேஸ்வரய்யா பெங்களூரு ரெயில் நிலையத்திற்கு அன்று இரவு 8.45 மணிக்கு செல்கிறது. அங்கிருந்து 8.55 மணிக்கு புறப்பட்டு ஹூப்ளி சந்திப்பிற்கு 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.20 மணிக்கு சென்று சேருகிறது. 21 பெட்டிகளோடு இயங்கும் இந்த சிறப்பு ரெயிலில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு உடனே டிக்கெட் எடுத்து பயணிக்கும் வகையில் 10 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை இல்லாமல் 8 படுக்கை வசதி பெட்டியும், ஒரு மூன்றடுக்கு குளிர் சாதன பெட்டியும் இந்த ரெயிலில் உள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.