நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி சிறப்பு ரெயில்


நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி சிறப்பு ரெயில்
x

பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ,திரும்பி வரும் வசதியாக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ,திரும்பி வரும் வசதியாக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி தீபாவளி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மாலை 3 மணிக்கு கிளம்பும் ரெயில் மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது; இதற்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story