மராட்டியம்- எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்


மராட்டியம்- எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
x

மராட்டியம்- எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:

சிறப்பு ரெயில்

ரெயில்களில் பயணிகள் கூட்ட நரெிசலை தவிர்ப்பதற்காக மராட்டிய மாநிலம் நான்டெட்டில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி வாராந்திர சிறப்பு ரெயில் (07189), மராட்டிய மாநிலம் ஹசர் சாஹிப் நான் டெட் ரெயில் நிலையத்தில் இருந்து அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 30-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சனிக்கிழமை மதியம் 12.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு திருச்சூர் வழியாக இரவு 8.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

எர்ணாகுளத்தில் இருந்து...

இதேபோல் எர்ணாகுளம் - ஹசர் சாஹிப் நான்டெட் வாராந்திர சிறப்பு ரெயில் (07190) அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும்.

இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு மராட்டிய மாநிலம் ஹசர் சாஹிப் நான் டெட் ரெயில் நிலையம் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story