பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போதைப்பொருள் சட்டம் குறித்து போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு


பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போதைப்பொருள் சட்டம் குறித்து போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு, போதைப்பொருள் சட்டம் குறித்து போலீசாருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விழுப்புரம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், இதற்காக போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும்படியும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் அறிவுரைப்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் விழுப்புரத்தில் உள்ள காவலர் பணியிடை பயிற்சி மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற பயிற்சியில் முன்னாள் அரசு வக்கீல் ராதிகா செந்தில் கலந்துகொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகாரை பெற்று உரிய முறையில் புலனாய்வு செய்யும் முறைகள், வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கைகள், குற்றவாளிகள் வழக்கில் இருந்து விடுபடாமல் அவர்களுக்கு உரிய முறையில் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தருவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இவரை தொடர்ந்து பண்ருட்டி அரசு உதவி வக்கீல் ராஜசேகர் கலந்துகொண்டு போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் முறைகள், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இதில் பணியிடை பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி, இன்ஸ்பெக்டர் பிரபாவதி, ஏட்டுகள் விஜய்அமிர்தராஜ், லதா, சாந்தகுமார், ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story