ஆக்கி விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை சார்பில் ஆக்கி விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி
ஊட்டி,
குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை மூலம் விடுமுறை காலத்தில்ஆக்கி விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதன் நோக்கம் விடுமுறையில் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது மற்றும செல்போனில் மூழ்காமல் இருப்பதே ஆகும். பயிற்சியின் போது வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. ஒரு மாத பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது. இதில் மத்திய அரசின் விளையாட்டு துறை செயலாளர் எம்.சுரேஷ், துணை செயலாளர் அருண் கே.நாயர் ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினர். முகாமில் 60 வீரர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story