சிறப்பு ரெயில் மானாமதுரை, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்

சிறப்பு ரெயில் மானாமதுரை, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 26 May 2022 7:43 PM GMT (Updated: 26 May 2022 7:44 PM GMT)

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலை மானாமதுரை மற்றும் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

சிறப்பு ரெயில்

காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான சிவகங்கை அர்ச்சுணன் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

தென்னக ெரயில்வே நிர்வாகம் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி வரை எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க முடிவு செய்துள்ளது.

இந்த ரெயில் செல்லும் மார்க்கத்தில் அருப்புக்கோட்டைக்கு அடுத்து காரைக்குடியில் தான் நின்று செல்லும் வகையில் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை, சிவகங்கை

இடையில் சென்னை-ராமேசுவரம் மற்றும் கோவை-ராமேசுவரம் ெரயில்கள் வந்து செல்லும் முக்கியமான மானாமதுரை ரெயில் சந்திப்பு மற்றும் மாவட்ட தலைநகரான சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நிறுத்தங்கள் அறிவிக்கப்படவில்லை.

சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் மானாமதுரை, சிவகங்கை ஆகிய 2 நகரங்களிலும் ரெயில் நின்று செல்லும் வகையில் நிறுத்தங்கள் அறிவித்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story