3 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்


3 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்
x

அணைக்கட்டு ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரடிகுடி, கெங்கநல்லூர், கீழ் கொத்தூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கரடிகுடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ராமு கணக்கு வழக்குகளை வாசித்தார்.

சிறப்பு அதிகாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா கலந்துகொண்டு ஓராண்டுக்கான வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாட்களின் பெயர்களில் அடித்தல் திருத்தல் உள்ளதாகவும் இனிவரும் நாட்களில் இந்த பிழை இருக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல கெங்கநல்லூரில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் முன்னிலையில் சமூக தணிக்கை நடந்தது.


Next Story